தூத்துக்குடியில் காணாமல்போன சகோதரர்கள் 6 நாட்களுக்குப் பிறகு காட்டுப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர், சாலை விபத்தில் கண்பார்வை இழந்த நிலையில், திருமணமாகாமல் சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 26ஆம் தேதி இவரது வீட்டின் அருகே கஞ்சா புகைத்தவர்களை, அருள்ராஜ் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கஞ்சா கும்பல், வீட்டில் தனியாக இருந்த அருள்ராஜை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு பண்டுகரை பகுதியில் அடித்துக் கொலை செய்து, உடலைக் குழிதோண்டி புதைத்துள்ளனர்.
அருள்ராஜை காணவில்லை என அவரது உறவினர்கள் 6 நாட்களாக தேடி வந்த நிலையில், பண்டுகரைப் பகுதியில் அருள்ராஜின் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர்.
அதே இடத்தில் அருள்ராஜின் சகோதரர் மாரிபாண்டியின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இரு சடலங்களையும் போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இருவரையும் கொலை செய்து குழிதோண்டி புதைத்துவிட்டு தப்பியோடிய கஞ்சா கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.