இந்திய பொருளாதாரம் இறந்து விட்டதாக கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய பொருளாதாரம் இறந்து விட்டது என்பது அனைவருக்கும் தெரியும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், உலகின் 4-வது பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது எனும் அடிப்படை உண்மையை கூட ராகுல் மறந்து விட்டார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரி விதிப்பால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என சசிதரூர், ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர் கூறியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள நயினார் நாகேந்திரன், ராகுல் காந்தி மட்டும் இந்திய பொருளாதாரத்தைத் தவறாக எடைபோடுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தாய்நாட்டையும், அதன் வளர்ச்சியையும் இழிவு செய்யும் மடமை கருத்துகளை கூறுவது அரசியல் தலைவருக்கு அழகல்ல எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.