அமைச்சர் நாசர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிப்பு செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை, கோட்டூர்புரத்தில் அயலக தமிழ் இளைஞர்களின் தமிழக பண்பாட்டுப் பயணத்தினை, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்வின் முடிவில் தேசிய கீதமும் பாடாமல் புறக்கணிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கோபமாக பேசிய அமைச்சர் நாசர், அடுத்த கேள்வி என செய்தியாளர்களை நோக்கி குரல் எழுப்பினார்.