திருப்பூர் அருகே விசாரணை கைதி உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மீதும் மேலும் 5 பேர் மீதும் கடந்த 2022ம் ஆண்டு கஞ்சா செடி வளர்த்ததாக வனத்துறையினரால் வழக்கு தொடரப்பட்டது. இதில் முன் ஜாமின் பெற்ற மாரிமுத்து வனத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் நேரடியாக வழக்கு விசாரணைக்கு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார்.
இதில் மற்ற 5 பேரும் வனத்துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். இதனால் மாரிமுத்து மீது வனத்துறை அதிகாரிகள் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுத்தை பல் வைத்திருந்ததாக மாரிமுத்து கைது செய்யப்பட்டார்.
இதனைதொடர்ந்து அவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் உள்ளதாக குற்றம் சாட்டும் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.