கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம் நிகழ்ந்தது.
ரத்தினபுரி பகுதியில் உள்ள கருமாரியம்மன், நாகலிங்கேஸ்வரர் கோயில் 44 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், ஆடி திருவிழாவை ஒட்டி கர்ப்பகிரகத்தில் உள்ள அம்மனின் சிலை அருகில் தெரிவது போல் பைனாகுலர்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்து ரசித்தனர்.