தமிழகத்தில் திறமையான மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் IIT மெட்ராஸ் இணைந்து, செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி அளிக்க உள்ளதாக, IIT இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறந்த தொழில்நுட்ப சூழலை உருவாக்க மனித வளத்தை வளர்ப்பது முக்கியம் என தெரிவித்தார்.
தமிழக அரசும் ஐஐடியும் இணைந்து FABRICATION UNIT அமைக்க உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 2,000 பேருக்கும் மேலான மாணவர்களுக்கு FABRICATION UNIT மூலம் பயிற்சி அளிக்கப்படும் என கூறினார். மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலமாக வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்றும் காமகோடி கூறினார்.