திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கல்பட்டி பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, ஒரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், மற்றொரு தரப்பை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து, திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.