தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சமூக நீதி என பெயரிடப்பட்டிருந்த விடுதியின் பெயர் பலகையை பொதுமக்கள் அழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் கள்ளர் மாணவ மாணவிகளின் தங்கும் விடுதிகளில் சமூக நீதி என பெயரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கு பொதுமக்கள் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சக்கம்பட்டி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சமூக நீதி என எழுதப்பட்டு இருந்தது. இதனை அழித்த பொதுமக்கள், அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.