நீலகிரியில் பருவம் தவறாமல் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி படுகர் இன மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான படுகர் இன மக்கள் தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் பருவம் தவறாமல் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி தெவ்வ ஹப்பா என்னும் குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஏக்குணி பகுதியில் அமைந்துள்ள ஹிரியோடையா கோயிலில், படுகர் இன மக்களின் குலதெய்வத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்று, குடும்பத்துடன் கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்று அனைவரும் மனமுருகி வழிபாடு நடத்தினர்.