குமரி மாவட்டம் களியல் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி, பண மோசடி செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, ஆசிரியர் ஒருவர், பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடையால் பகுதியில் உள்ள சென்மேரிஸ் என்ற தனியார் பள்ளியில் கீதா ராணி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பணியில் சேர 5 லட்சம் ரூபாய் தொகையைப் பள்ளி நிர்வாகம் கேட்டதாகவும், அதனைக் கட்டாயப்படுத்திப் பெற்றதாகவும் கீதாராணி குற்றம்சாட்டி உள்ளார்.
பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதர ஆசிரியர்கள் தனக்குத் தொல்லை கொடுத்து வருவதாகவும், பள்ளியில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்டால் பள்ளி நிர்வாகம் தவறிழைக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் குற்றஞ்சாட்டி, பள்ளியின் முன்பாக நின்று, அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.