திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டி.டி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்குச் சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.