இந்தியக் கால்பந்து ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக கலித் ஜமில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், ஐ-லீக் 2017 சீசனில் ஐஸ்வால் கால்பந்து கிளப் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
48 வயதாகும் கலித் ஜமில், தற்போது ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார். இந்நிலையில் அவர், இந்தியக் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.