கடந்த ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு கோடியே 96 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி மூலம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 735 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், இதன் மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் – ஜூலை மாத்தை விட இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருமானம் 10 புள்ளி 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் 6 புள்ளி 20 சதவீதம் உயர்ந்து, ஒரு லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.