திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் திமுகவினருக்கு ஆதரவாக மேயர் செயல்படுவதாகக் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆவடி மாநகராட்சி பகுதியில் தனியார் கழிவுநீர் அகற்றும் 15-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இயங்கி வந்த கழிவுநீர் சுமையுந்துகளுக்கு திடீரென ஆவடி மாநகராட்சி தடை விதித்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள லாரி உரிமையாளர்கள், திமுகவினரின் கழிவுநீர் லாரிகள் மட்டுமே ஓட வேண்டும் என மேயர் நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.