செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருட்களை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பேரின்ராஜ் என்பவர் அவரது பகுதியில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தீபக் என்பவரை கைது செய்தனர். அவருடன் இருந்த சிறுவனைத் தேடி போலீசார் தேடி வருகின்றனர்.