மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாக, மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சிவானந்தா சாலையில் வைகோவுக்கு எதிராக உண்ணாவிரத அறப்போராட்டத்தை மல்லை சத்யா நடத்தி வருகிறார்.
முன்னதாக மெரினா கடற்கரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 32 ஆண்டு கால மதிமுக பயணத்தில் இப்படியொரு நிலை வரும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், குறைந்தபட்ச அரசியல் பக்குவம் கூட துரை வைகோவுக்கு இல்லை எனவும், கட்சியின் மூத்த தலைவர்கள் துரை வைகோவிற்காக ஓரங்கட்டப் படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.