12 ஆவது புரோ கபடி லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
12 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரின் போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகின்றன.
சீசனின் முதற்கட்ட போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஏழு வருட இடைவெளிக்குப் பின் விசாகப்பட்டினத்தில் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.