திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதாகவும், எதிர்கால சந்ததிகளைப் பாதுகாக்க திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்ட அன்புமணிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பேசிய அன்புமணி, போதை ஆட்சியில் தலைமுறைகள் அழிந்து கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசு மீது கோபத்தில் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்தார்.