திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையம், பராமரிப்பு பணி என்ற பெயரில் நகராட்சி நிர்வாகத்தால் பலமுறை இடித்துக் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், வணிகர்களிடம் கலந்தாலோசிக்காமல் தரமாக உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடத்தைக் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.