திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.
பெரியவேளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பூஜாதேவி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவரின் ஆதரவில் வசித்து வந்துள்ளார்.
இவர் தனது 5 வயது குழந்தையை மதபோதகரான வடிவேலுவிடம் கொடுத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய தாய் பூஜாதேவியிடம், மதபோதகர் தனக்கு பாலியல் தொல்லை பாதிக்கப்பட்ட சிறுமி முறையிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பூஜாதேவி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வடிவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.