ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் கட்டப்பட்டு வந்த தரைப்பாலம் இடிந்து விழுந்தது. ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உதம்பூரில் உள்ள ஸ்வேனா மற்றும் நர்சூ பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த தரைப்பாலம் இடிந்து விழுந்தது.
அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த பாலம், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இடிந்து விழுந்த நிலையில், பாலத்தைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.