சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் முதியவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும், வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே முகாம் நடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அரசின் நிதியில் இருந்து உருவாக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை சாந்தோமில் தொடங்கி வைத்தார்.
அரசுத் திட்டத்தில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனையும் மீறி, இந்த திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை சாந்தோமில் தொடங்கப்பட்ட மருத்துவ முகாமில், அடிப்படை வசதிகள் இல்லை எனவும், முதியோர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த முகாம் மாற்றுத்திறனாளிகளை வைத்து புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விமர்சித்துள்ளார். .