மிர்ச்சி சிவா நடித்துள்ள பறந்து போ படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட எதார்த்தமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் ராம் .
இவரது இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று எனப் பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில், இப்படம் வருகிற 5ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.