உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் கேதர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது.
சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் இடையே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் கேதர்நாத் யாத்திரை தடைப்பட்டது.
இதையடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினர், ஆண்கள் பெண்கள் என மொத்தம் 474 பேரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் ஏராளமானோர் கேதர்நாத் யாத்திரையை மீண்டும் தொடங்கினர்.