தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூரில் பெய்த கனமழை காரணமாகக் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
வேப்பத்தூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதற்காகக் குவித்து வைக்கப்பட்டன.
ஆனால் கொள்முதல் செய்யப்படாத நிலையில், கனமழை காரணமாக நெல் மூட்டைகள் முழுவதும் மழை நனைந்து சேதமடைந்தன.
இதனால் வேதனையடைந்த விவசாயிகள், நெல்-ஐ கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்