மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் லக்சயா சென், தருண் மன்னேபள்ளி ஆகியோர் தோல்வியடைந்தனர்.
சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, மலேசியாவின் ஜஸ்டின் ஹோவை எதிர்கொண்டார்.
இதில் 21-19, 16-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜஸ்டின் ஹோவ் வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், இந்தோனேசியாவின் அல்வி ஃபர்ஹானுடன் மோதினார். இதில் 21-16, 21-9 என்ற செட் கணக்கில் லக்சயா சென் தோல்வியடைந்தார்.