நகைச்சுவை நடிகர் மதன் பாப், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த மதன் பாப், தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தனர். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நடிகர் மதன் பாப் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில்,
சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் மதன் பாப், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.