ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராடல், பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்தப்பட்டது.
இதில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய சுவாமியை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். மஞ்சள் நீராடல் நிகழ்வையொட்டி கோயில் யானை ராமலக்ஷ்மியின் உடல் முழுவதும் மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்டது.