கவின் கொலை வழக்கு குறித்து சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் கவின் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் சுர்ஜித்தின் கூட்டாளிகள் மற்றும் பின்னணியில் உள்ளோர் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், கவினை கொலை செய்யும் நோக்கத்துடனேயே சுர்ஜித் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கவின் மரணம் குறித்து அறிந்ததும், எஸ்ஐ சரவணன் உடனடியாக சுபாஷினி பணிபுரிந்த மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததாகவும், அப்போது நடந்த வாக்குவாதத்தில் சுபாஷினியை அவர் கடுமையாகக் கண்டித்ததாகவும் கூறியுள்ளனர். மேலும், உறவினர் வீட்டில் தங்கியுள்ள சுபாஷினியிடம் விசாரணை நடத்தியபோது அவர் கதறி அழுததாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.