சேலம் மாவட்டம் ஓமலூரில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது ஏற்பட்ட தகராறில் காயமடைந்த பாஜக முன்னாள் ஒன்றிய தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேல் காமாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பாஜக முன்னாள் மேற்கு ஒன்றிய தலைவரான இவரிடம் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சண்முகம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.