திருப்பூரில் தண்ணீர் திருட்டை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கயம் காவல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் விவசாயத்திற்காக வழங்கப்படும் தண்ணீர் திருடப்படுவதாகவும், இதுதொடர்பாக புகாரளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தண்ணீர் திருட்டின் பின்னணி விவரங்களுடன் காங்கயம் காவல் நிலையத்திற்கு வந்த விவசாயிகள், அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது திருப்பூர் வந்தாலும் அவருக்கு கறுப்பு கொடி காட்டுவோம் என ஆவேசம் தெரிவித்தனர்.