தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
ஓடாநிலையில் அமைந்துள்ள மாவீரர் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்ர.
இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், இளம் வயதிலேயே சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தவர் மாவீரர் தீரன் சின்னமலை என கூறியுள்ளார்.
ஆங்கிலேயப் படையினரால் வெல்ல முடியாத வீரராக திகழ்ந்த அவரை, சூழ்ச்சி செய்து கொன்றனர் ஆங்கிலேயர்கள். மரணிக்கும் வரையிலும் தோல்வியைத் தழுவாத வீராதி வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பெருமைகளைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.