கடந்தாண்டு பொங்கல் பரிசு வழங்காத திமுக அரசு, சட்டமன்ற தேர்தலையொட்டி அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்க முயற்சிக்குமென, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்தும் இயற்கைக்கு மாறாக நடந்து வருவதாகவும், மக்களிடம் செல்வாக்கை இழந்து வருவதால் வெற்றி பெற திமுகவினர் என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும், யாருக்கு எத்தனை தொகுதி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார். கட்சியில் மட்டுமின்றி திமுக கூட்டணியிலும் ஒற்றுமை இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் தனக்கு வந்ததாக தெரியவில்லை எனக் கூறிய நயினார் நாகேந்திரன், முதலமைச்சரை சந்திக்கும் முந்தைய நாள் ஓபிஎஸ்ஸை தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.