தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்து தேசிய தலைமை தான் பதிலளிக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது தொடர்பாக கூட்டணியின் தலைவர் மற்றும் தேசியத் தலைமை பதிலளிக்கும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், சென்னை தெற்கு மாவட்ட தலைவர் திரு. சஞ்சீவி , மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.