ஏழை தொழிலாளர்களின் கிட்னி திருடப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
தீரன் சின்னமலையின் 220ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள அவரது மணிமண்டபத்தில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புவதாக தெரிவித்தார். வேலைவாய்ப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், கிட்னி விற்பனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.