ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினரால் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் அகால்’ மூன்றாவது நாளாக தொடர்கிறது.
இந்த நிலையில், குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் இன்று நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.