2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் NDA வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்போது தேர்தல் வந்தாலும் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் படுகொலைகள் நடப்பதற்கு காரணம் போதைப்பொருட்கள்தான் என்றும், காவல்துறை குற்றங்களை தடுக்க தவறி விட்டதாகவும் அவர் கூறினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இபிஎஸ் உடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன் என்றும், ஓபிஎஸ் குறித்து கருத்து கூற விரும்பவில்லை எனறும் நயினார் தெரிவித்தார்.