கோவை அருகே உள்ள ஆசிரமத்தில் மாணவர்களை ஊழியர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அன்னூர் அடுத்த நல்லகவுன்டம்பாளையம் பகுதியில் பிரபஞ்ச அமைதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் தங்கி அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் பணத்தை திருடியதாக கூறி மாணவர் ஒருவர் மீது ஆசிரம ஊழியர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு கண்ணீருடன் அந்த மாணவர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் 15 வயது மாணவி ஒருவர், சக மாணவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரம ஊழியர்கள் மாணவியின் சகோதரரை வைத்து அவரை கொடூரமாக தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளதாக தெரிகிறது.