இந்திய பாரம்பரிய அறிவியல் மையத்தின் சார்பில் செங்கல்பட்டில் ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி 60 வகையான பாரம்பரிய நெல் வகைகள் நாற்று விடும் நிகழ்வு நடைபெற்றது.
மதுராந்தகம் அருகே உள்ள சுக்கன்கொள்ளை கிராமத்தில் சுமார் 11 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாயம் தொழில் நுட்ப மையம் மற்றும் ஆராய்ச்சி பண்ணை செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த 30 ஆண்டு காலமாக 172 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் இயற்கை முறையில் சாகுபடி செய்யபடுகிறது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி 60 வகையான பாரம்பரிய நெல்லுக்கு நாற்று விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.