முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை எனவும், திமுகவில் இணையப்போவதாக வரும் செய்திகள் வதந்தி எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களை இல்லம் தேடி சந்தித்து நலம் விசாரிப்பது தமிழ் பண்பாடு என தெரிவித்துள்ள ஓபிஎஸ், அதன் அடிப்படையில் தான் பல்வேறு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை இல்லம் தேடி சென்று நலம் விசாரித்தேன் என குறிப்பிட்டுள்ளார்
ஆனால் இந்த சந்திப்பை வைத்து தான் ஒரு திமுகவின் பி டீம் எனவும் நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும் சிலர் வதந்திகளை பரப்பி வருவதாக பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
திமுகவில் இணையப்போவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் தான் முதலமைச்சரை சந்தித்தேனே தவிர இதில் துளியும் அரசியல் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.