பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலை தண்ணீர் சூழ்ந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பஞ்சலிங்க அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க சென்ற பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், அடிவார பகுதியிலுள்ள அமனலிங்கேஸ்வரர் கோயிலையும் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து, கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களை எச்சரிக்கை மணி ஒலித்தும், விசில் ஊதியும் ஊழியர்கள் வெளியேற்றினர்.