காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ஹேமா என்பவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான செல்வமுத்துக்குமரன் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நடைபெற்றுள்ளது.
பெங்களூருவில் இருவரும் வசித்து வந்த நிலையில், மனைவியின் மீது சந்தேகம் கொண்ட செல்வமுத்துகுமரன் அவரை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வேலைக்கு சென்றதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆடி மாத அழைப்புக்காக ஜூலை 9ஆம் தேதி ஹேமாவை பெற்றோர் காரைக்கால் அழைத்து வந்தபோது கணவர் கொடுமை தாங்க முடியவில்லை என்றும், விவாகரத்து பெறவுள்ளதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், இரவு தூங்க சென்ற ஹேமா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார், உடலை கைப்பற்றி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து செல்வமுத்துகுமரனை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.