கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்குக் காதல் தொல்லை அளித்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீதர் என்பவர் தன்னைக் காதலிக்க வற்புறுத்தி 12-ஆம் வகுப்பு மாணவியை தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.