ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை விரைந்து மீட்க வலியுறுத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
உடல் மெலிந்த நிலையில் பதுங்கு குழியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இரு பணயக் கைதிகளின் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், காசா போரை நிறுத்தி பணயக் கைதிகளை விரைந்து மீட்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய பணய கைதியான பிரஸ்லாவ்ஸ்கியின் தந்தை, தனது கண் எதிரே தனது மகன் மரணித்துக் கொண்டிருப்பதாகவும், அதை அறிந்தும் பிரதமர் நெதன்யாகு அவரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.