திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளைஞர்கள் – போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர்.
புதுகாலணி அருகே ராஜேஷ் கண்ணா என்பவரை உதவி ஆய்வாளர் பாலமுருகன், ஏட்டு ஜெகன் ஆகியோர் தாக்கியதாகவும், இதுகுறித்து கேள்வி கேட்ட சின்னதுரை, ராமசாமி ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின், பொதுமக்கள், போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில், 4 பேர் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், முதலில் தாக்குதல் நடத்திய தனிப்பிரிவு போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் புகார் அளித்தனர்.