ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிடம் பிடிபட்ட இஸ்ரேல் பணயக் கைதி எவியாதர் டேவிட், எலும்பும் தோலுமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடந்த நோவா இசை நிகழ்ச்சியில், ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 350-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், பணயக் கைதிகளுள் ஒருவரான எவியாதர் டேவிட் உணவு பற்றாக்குறையால் எலும்பும் தோலுமாக மெலிந்த நிலையில், உயிருக்குப் போராடி வரும் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி இஸ்ரேல் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.