ஆடிப்பெருக்கையொட்டி தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. சிருங்கேரி சாரதா மண்டபத்தில் இருந்து மங்கல சீர்வரிசைப் பொருட்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
பின்னர், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்தில் சீர்வரிசைப் பொருட்கள், 18 வகையான சாதங்கள் அன்னை தாமிரபரணிக்கு படைக்கப்பட்டு, தீபராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, புதுமணத் தம்பதிகள் மற்றும் பெண்கள் தாமிரபரணி ஆற்றுக்குச் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.