சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் வெங்கடேசன் தான் வருவார் என அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சமுதாயக்கூடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் தொகுதியில் மீண்டும் வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என அறிவித்தார்.
கட்சி விதிகளை மீறி வேட்பாளரை முன்பே அறிவித்துள்ளது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.