கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
முளகுமூடு பகுதியை சேர்ந்த ஆன்றனி மெகலன் என்பவர் அவரது நண்பர்கள் 2 பேருடன் ஆட்டோவில் சென்றுக்கொண்டு இருந்தார்.
ஆட்டோ கொல்லன்விளை பகுதியை நெருங்கும் போது முன்பக்க சக்கரம் தனியே கழன்று ஓடியது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆன்றனி மெகலன் உள்ளிட்ட 3 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.