நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டிரைலர் யூடியூப்பில் வெளியாகி, ஒரு கோடியே 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கூலி படம் உருவாகி உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், யூடியூபில் வெளியான கூலி டிரெய்லர் ஒரு கோடியே 40 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.